26|11|2015
வியாழன் போற்றுதும்
வியாழன் போற்றுதும்,
விரிந்த வுலகையும்
விண்ணையும் போற்றுதும்!
அன்புடை மையி
னருமை போற்றுதும்,
அன்புடன் பொருந்திய
வாருயிர் போற்றுதும்!
அன்புடை யாரி
னுடம்பும் போற்றுதும்,
அன்பினால் பெற்றிடு
மார்வமும் போற்றுதும்!
அறமே பொருந்திய
வன்பினைப் போற்றுதும்,
மறத்திற் குமன்பே
முறையெனப் போற்றுதும்!
அன்பில் லாரை
யழிக்கு மறமென
நன்றா யுரைத்த
மறைமொழி போற்றுதும்!
இன்பந் தந்திடு
மன்பைப் போற்றுவோம்,
அன்புட னிணைந்த
உயிர்நிலை போற்றியே!
வியாழனைப் போற்றுவோம்
வியாழனைப் போற்றுவோம்,
விடியும் வேளை
வந்ததாய்ப் போற்றியே!!
வியாழன் போற்றுதும்
வியாழன் போற்றுதும்,
விரிந்த வுலகையும்
விண்ணையும் போற்றுதும்!
அன்புடை மையி
னருமை போற்றுதும்,
அன்புடன் பொருந்திய
வாருயிர் போற்றுதும்!
அன்புடை யாரி
னுடம்பும் போற்றுதும்,
அன்பினால் பெற்றிடு
மார்வமும் போற்றுதும்!
அறமே பொருந்திய
வன்பினைப் போற்றுதும்,
மறத்திற் குமன்பே
முறையெனப் போற்றுதும்!
அன்பில் லாரை
யழிக்கு மறமென
நன்றா யுரைத்த
மறைமொழி போற்றுதும்!
இன்பந் தந்திடு
மன்பைப் போற்றுவோம்,
அன்புட னிணைந்த
உயிர்நிலை போற்றியே!
வியாழனைப் போற்றுவோம்
வியாழனைப் போற்றுவோம்,
விடியும் வேளை
வந்ததாய்ப் போற்றியே!!