"அருகாமை" பொருள் என்ன ?

அருகாமை:

பலரும் அருகில் என்பதை அருகாமை என்றே எழுதுகின்றார்கள். அருகாமை என்றால் தொலைவு என்று பொருள் தரும்.

அருகுதல் அல்லது அருகிப் போய் விட்டது என்றால் குறைந்து போய்விட்டது என்று பொருள் தரும். அருகில் என்றால் தூரம் குறைந்து உள்ளது. அதாவது பக்கத்தில் என்று பொருள் கொள்ளலாம். 

அருகாமை அருகு +ஆ+ மை என்று பிரிக்கலாம். ஆ என்பது எதிர்மறை இடைநிலை. ஆகவே அருகாமை என்ற சொல் தொலைவு என்ற எதிர்மறைப் பொருளைக் கொடுக்கும். 

**கல்லாமை, அழுக்காறாமை, வெஃகாமை, விளங்காமை போன்ற எதிர்மறைத் தொழிற் பெயர்கள் பலவுள. அருகாமையில் எதிர்மறை எதுவுமில்லை. அருகுதல்- சுருங்குதல்; அருகாமை - சுருங்காமை என்றால் அத் தொழிற்பெயர் வேறு. இனிமேல் நம் அருகில் இந்த 'ஆமை' வராமல் காக்க வேண்டும்.,,,, 

இது தமிழண்ணல் திரு இராம.பெரிய கருப்பன் அவர்கள் அருகாமை என்ற சொல்லுக்கு அளித்த விளக்கம் ple_leaf: