திருக்குறள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருக்குறள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

குறளோவியங்கள் : குறளோவியன் கல்லூர் அ.சாத்தப்பன்

26|11|2015

வியாழன்    போற்றுதும்
வியாழன்    போற்றுதும்,
விரிந்த   வுலகையும்
விண்ணையும்   போற்றுதும்!
அன்புடை   மையி
னருமை      போற்றுதும்,
அன்புடன்    பொருந்திய
வாருயிர்     போற்றுதும்!
அன்புடை    யாரி
னுடம்பும்      போற்றுதும்,
அன்பினால்  பெற்றிடு
மார்வமும்    போற்றுதும்!
அறமே       பொருந்திய
வன்பினைப்   போற்றுதும்,
மறத்திற்    குமன்பே
முறையெனப்    போற்றுதும்!
அன்பில்    லாரை
யழிக்கு    மறமென
நன்றா     யுரைத்த
மறைமொழி   போற்றுதும்!
இன்பந்   தந்திடு
மன்பைப்    போற்றுவோம்,
அன்புட   னிணைந்த
உயிர்நிலை     போற்றியே!
வியாழனைப்   போற்றுவோம்
வியாழனைப்   போற்றுவோம்,
விடியும்     வேளை
வந்ததாய்ப்    போற்றியே!!

மேலும் படிக்க »

குறள் பொருள் கண்டறிக : அகவிழியன்


#௧

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்
(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:1096)

சொற்பொருள் :
உறாஅதவர்போல்-அயலார் போல;
சொலினும்-சொன்னாலும்.
செறாஅர்- காதலி / காதலன்
சொல்-மொழி;
ஒல்லை-விரைவில் ;
உணரப்படும்-அறியப்படும்.

குறிப்பு :
செறாஅர்=வெகுளாதவர்;
வெகுள்= வெறுப்பு =To hate/dislike;
வெகுளாமை= வெறுப்பின்மை= absence of hate;
வெகுளாதவர்= The person with absence of hate (Lover);

அஃது,
வெகுளாதவர்= காதலி / காதலன்

காதலர் பழகிப் புரிதல் ஏற்படும் காலகட்டத்தில் வெளிப்படும் உணர்வு பற்றிய குறள்.

பொருள் : கண்டறிக
*********************************************************
குறல் பொருள் கண்டறிக :

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்

(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:44)

சொற்பொருள் :

பழி-தீவினை;
 அஞ்சி-நடுங்கி;
பாத்து-பிரித்துக் கொடுத்து; ஊண்-உண்ணுதல்; உடைத்தாயின்-உடையதானால்,

வாழ்க்கை-வாழ்தல்;
வழி-வழி;
எஞ்சல்-குறைவு; எஞ்ஞான்றும்-எப்போதும்; இல்-இல்லை.

குறிப்பு :

வழிஎஞ்சல் = Extinction of Lineage

என்றும் பொருள்படும்.

விளக்கம் : குழுவினர் கண்டறிந்து இங்கு பதியவும்.
மேலும் படிக்க »

திருக்குறளில் இருந்து என்னவெல்லாம் எடுத்துக் கொள்ள முடியும்.


1. வாழ்க்கை நெறிகள்
2. சிந்திக்கும் முறை பற்றிய பயிற்சி
3. தொகுத்து வகுத்துப் பகுத்துப் பார்க்கும் அறிவு
4. சொல்வளம் பெறுதல் பயிற்சி (ஞான்று/வைகல்/நாள்...)
5. புணர்ச்சி நெறிகள் அனைத்திற்கும் குறளில் காட்டுகள் உள்ளன.
6. அளபெடை குற்றுகர குற்றிகர எழுத்துகளை அறிதல்
7. பொருள்கோள் முறை
8. அணிபடச்சொல்லும் முறை (பொருளணியும் சொல்லணியும் - பொருளணிக்கு எத்தனையோ காட்டுகள் உண்டு... உடுக்கை இழந்தவன் கை என்பது ஒன்றே உவமை அமைக்கும் முறையைக் கற்றுத்தரும்; மற்றை அணிகளெல்லாம் குறளில் உள்ளன - சொல்லணிக்கு ஏராளமான பாடல்கள் உள்ளன...)
9. உவக்காண் எங்காதலர் சென்றார் இவக்காண் என்மேனி பசப்பூர் வது என்பதில் உள்ள குறிப்பு அறியும் பயிற்சி, நுண்பொருள் உணரும் அழகியற் பயிற்சி.
10. யாப்புப் பயிற்சி, செப்பலோசையை முழுதும் கற்கலாம்
11. தொடை நயம் (பேதமை யென்ப தியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல் என்பதே சான்று)
12. மறைந்த தமிழ் மொழி வழக்குகளைக் கற்றுக்கொள்வது (உவக்காண்)

இன்னும விரிக்க விரிக்க மிகுந்து கொண்டே போகும்...

அதனால் திருக்குறள் கற்பதினால் பல பயன் உள்ளன.. உங்கள் வீட்டில் குறள் உள்ளதா?

நன்றி...

அரங்கன்

மேலும் படிக்க »

திருக்குறள் போற்றி : தொகுப்பாளர். இரா. இளங்குமரனார்

கந்த சஷ்டி அல்லது சுப்பிரபாதம் காலை எழுந்தவுடன் கேட்பது சில வீட்டாரின் வழக்கம். கடவுளர் துதி பாடுவதை கேட்பதினால் உண்டாகும் பயனறியேன். நம் வள்ளுவர் அருளிய திருக்குறளை துதி வடிவில் நம் பிள்ளைகளும் நாமும் நாள்தோறும் கேட்டால் வள்ளுவர் கூறும் அறம் மனதில் பதியுமல்லவா ? உங்களுக்காக "போற்றிக்குறல்" .



திருக்குறள் போற்றி

தொகுப்பாளர். இரா. இளங்குமரனார்

திருவள்ளுவர் கண்ட முழுமுதல் இறைமை வழிபாடு, உள்ளொளி மிக்க உயர்நத குருவர் வழிபாடு, உலக நலங்காக்கும் பண்பு நல வழிபாடு, என்பவற்றை அவர்தம் வாக்கும் நோக்கும் கொண்டு ஆக்கப்பட்டது இப் போற்றித் தொகுப்பாகும். தனிப்பேரிறைமை, தவப்பெருங்குருவர், தண்ணளிப் பண்பாடு என்பவற்றைத் தாய்மொழி வழியாக நினைந்து நினைந்து உணர்நது உணர்ந்து உருகி உருகிப் போற்றுவதே உலகொத்த ஒரு நெறியாகும். அந்நெறியை நெஞ்சார உணர்ந்து நேயத்தால் போற்றி உயிர் தளிர்க்கச் செய்யுமாறே இப்போற்றி ஆக்கப் பெற்றதாகும்.

திருக்குறளை ஓதினால் உயர்வு கிட்டும்,
திருக்குறளை ஓதினால் பண்பாடு தானே வரும்,
திருக்குறளை ஓதினால் மனமாசு ஒழியும்,
திருக்குறளை ஓதினால் நோய் நொடி நீங்கும்,
திருக்குறளை ஓதினால் உயிர் தளிர்த்து நீடு வாழலாம்,
திருக்குறளை ஓதினால் தெய்வநிலை எய்தலாம்.

ஆதலால் திருக்குறறை ஓதிச் சீரும் சிறப்பும் பேரும் பெருமையும் வாழ்வும் வளமும் பெற்றுச் சிறப்பெனும் செம்பொருள் கண்டு பேராப் பெருநிலை எய்தலாம். இதனை எண்ணிப் பயன்பெற்று வரும் பட்டறிவால் படைக்கப் பெற்றதே இப்போற்றி. ஆதலால், இதனை ஓதியும் உணர்ந்தும் வழிபட்டும் ஒளிமிக்க வாழ்வை ஒவ்வொருவரும் அடைவாராக.
அகர முதலாம் ஆதியே போற்றி (1)
மலர்மிசை ஏகும் மானடி போற்றி (3)
தனக்குவமை இல்லாத் தகையடி போற்றி (7)
எண்குணத் திலங்கும் இறையே போற்றி (9)
அமிழ்த மழையாம் அருளே போற்றி (11)
ஐம்பொறி அடக்கும் ஆற்றலே போற்றி (24)
நிறைமொழி அருளும் நிறைவே போற்றி (28)
குணமெனும் குன்றே குறியே போற்றி (29)
மனத்தில் மாசிலா மணியே போற்றி (34)
வாழ்வாங்கு வாழும் வாழ்வே போற்றி (50)

மங்கல மனையற மாட்சியே போற்றி (60)
அறிவறி பண்புப் பேறே போற்றி (61)
அன்போ டியைந்த வழக்கே போற்றி (79)
வருவிருந் தோம்பும் வளமே போற்றி (83)
இன்சொல் வழங்கும் இயல்பே போற்றி (99)
செய்யாமற் செய்யும் செழுநலம் போற்றி (101)
காலத் துதவும் கனிவே போற்றி (102)
நெஞ்சங் கோடா நெறிநிலை போற்றி (118)
நிலையில் திரியா மலையே போற்றி (124)
ஓழுக்கம் குறையா உரமே போற்றி (139)

பொறுக்கும் அழியாப் புகழே போற்றி (156)
அழுக்கா றில்லா அறனே போற்றி (163)
அறனறிந்து வெஃகா அறவே போற்றி (179)
புறஞ்சொலல் அறியாப் பொலிவே போற்றி
பயனில பகராப் பண்பே போற்றி (197)
பிறன்கே டெண்ணாப் பெருமையே போற்றி
ஒத்த தறியும் உயர்வே போற்றி (214)
ஊருணி நீராம் உடைமையே போற்றி (215)
பயன்மரம் ஆகும் பரிவே போற்றி (216)
மருந்து நலமாம் மாண்பே போற்றி (217)

வறியார்க் குதவும் வாழ்வே போற்றி (221)
பசித்துயர் மாற்றும் பரமே போற்றி (225)
வசையிலாப் புகழே வானே போற்றி (240)
தன்னுயிர் அஞ்சாத் தகவே போற்றி (244)
அல்லல் அறியா அருளே போற்றி (245)
உயிரழித் துண்ணா ஒளியே போற்றி (259)
தன்னுயிர் தானறு தவமே போற்றி (268)
கூற்றையும் வெல்லும் நோற்றலே போற்றி
அளவறி நெஞ்சத் தறமே போற்றி (288)
உள்ளத்தாற் பொய்யா ஒழுக்கமே போற்றி

வெகுளியை மறக்கும் விரிவே போற்றி (303)
இன்னாமை எண்ணா இனிமையே போற்றி
பகுத்துண் டோம்பும் பரிவே போற்றி (322)
நிலைபே றுணரும் நிலையே போற்றி (331)
பற்றது பற்றாப் பற்றே போற்றி (348)
மெய்ப்பொருள் உணரும் மேன்மையே போற்றி
ஐயம் அணுகாத் தெளிவே போற்றி (354)
சிறப்பெனும் செம்பொருட் செறிவே போற்றி
பேரா இயற்கைப் பெற்றியே போற்றி (370)
அசையா உறுதி ஆக்கமே போற்றி (371)

முறைசெய் தருளும் இறையே போற்றி (388)
உலகின் புறத்தா னின்புறவே போற்றி (388)
நுண்மாண் நுழைபுல நோன்பே போற்றி (407)
ஆவ தறியும் அறிவே போற்றி (427)
எதிரதாக் காக்கும் இயல்பே போற்றி (429)
வரும்முன் காக்கும் வாழ்வே போற்றி (435)
அறனறி மூத்த அறிவே போற்றி (441)
பெரியரிற் பெரிய பேறே போற்றி (444)
மன்னுயிர்க் காக்க மனநலம் போற்றி (457)
தக்கதே செய்யும் தகைமையே போற்றி (466)

அமைந்தாங் கொழுகும் அளவே போற்றி
செய்தற் கரிய செய்கையே போற்றி (489)
அஞ்சாத் துணிவே துணையே போற்றி (497)
திறந்தெரிந் தறியும் தெளிவே போற்றி (501)
வாரி பெருக்கும் வகையே போற்றி (512)
அளவ ளாவும் அமிழ்தே போற்றி (523)
சுற்றம் சுற்றும் சுடரே போற்றி (524)
புகழ்ந்தவே புரியும் புகழே போற்றி (538)
கோலது கோடாக் கொற்றமே போற்றி (546)
குடிபுறங் காக்கும் குணமே போற்றி (549)

ஒத்தாங் கொறுக்கும் உரனே போற்றி (561)
கண்ணோட்டம் என்னும் கவினே போற்றி
உள்ளம் உடைமையாம் உடைமையே போற்றி (592)
நீரள வுயரும் மலருளம் போற்றி (595)
குடியெனும் குன்றா விளக்கே போற்றி (601)
அறிவறிந் தாற்றும் ஆள்வினை போற்றி (618)
அடுக்கும் இடுக்கணை அழிப்பாய் போற்றி
இன்பத் தின்பம் விரும்பாய் போற்றி (629)
மதிநுட்பம் நூலோ டுடையாய் போற்றி (636)
உலகத் தியற்கை உணர்வோய் போற்றி (637)

நிரந்தினிது சொல்லும் நீர்மையே போற்றி
வேண்டிய எலாம்தரும் வினைநலம் போற்றி
நடுக்கறு காட்சி நயனே போற்றி (654)
சொல்லிய செய்யும் சுடரே போற்றி (664)
வீறெய்து மாணபாம் வினைத்திறம் போற்றி
நூலாருள் நூல்வலல் நுண்மையே போற்றி
தூய்மை துணைமை துணிவே போற்றி (686)
போற்றிற் கரியவை போற்றியே போற்றி
குறிப்பிற் குறிப்புணர் குறிப்பே போற்றி (703)
ஒளியார் முன்னுறும் ஒளியே போற்றி (714)

கற்றவை செலச்சொல் கலையே போற்றி
நாடா வளத்ததாம் நாடே போற்றி (739)
அன்பீன் குழவியாம் அருளே போற்றி (757)
அருள்வளர் செவிலிப் பொருளே போற்றி (757)
நிறைநீர நீரவர் கேண்மையே போற்றி (782)
உள்ளம் பெருகுவ உள்ளுகை போற்றி (798)
கேளிழுக்கம் கேளாக் கெழுதகை போற்றி
இகலெனும் எவ்வம் இல்லாய் போற்றி (853)
பகைநட்பாக் கொள்ளம் பண்பே போற்றி
அளவறிந் துண்ணும் அறிவே போற்றி (943)

செப்பமும் நாணும் சேர்வே போற்றி (951)
பெருக்கத்து வேண்டும் பணிவே போற்றி (963)
உள்ள வெறுக்கையாம் ஒளியே போற்றி (971)
கொல்லா நலத்ததாம் நோன்மையே போற்றி (994)
நயனொடு நலம்புரி பயனே போற்றி (994)
சீருடைச் செல்வ மாரியே போற்றி (1010)
கருமத்தால் நாணும் நாணே போற்றி (1011)
உழுதுண்டு வாழும் வாழ்வே போற்றி (1033)

அகர முதலாம் ஆதியே போற்றி போற்றி
மேலும் படிக்க »

அறம் பொருள் இன்பம் : வள்ளுவர் மாண்பு

அறம் பொருள் இன்பம் :

தமிழர் தம் வாழ்வில் கொண்டொழுகு பற்றுறுதிகள் மூன்று... அவை அறம், பொருள், இன்பம் என்பவையாம்.

இவற்றின் பொருள் என்ன?

பரந்து விரிந்த, ஆழ்ந்து அகன்ற, பொருள் தரும் இச்சொற்களின் வரையறையை, மணிச்சுருக்கமாக வள்ளுவர் உரைக்கும் மாண்பினைக் காண்க...

அறம்:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறம் #34

அஃதாவது, மனத்தில் மாசு இல்லாது இருக்கும் நிலையே அறமாகும். அவ்வளவே.

பொருள் :

திறனறிந்து தீதின்றி வந்த பொருள் #754

செய்யும் திறப்பாட்டினை அறிந்து, தீய வழிகளல்லாத நல்வழிகளில் வருவதே பொருள்

இன்பம் :

அறத்தான் வருவதே யின்பம் #39

அறம் வழி நின்று வாழ்தலால் வருவதே இன்பமாகும்.


என்னே வள்ளுவர் மாண்பு!!!

- அரங்கன் ஐயா 
மேலும் படிக்க »

குறளின் பொருள் கண்டறிக: அரங்கன்

திருக்குறள் 16/10/2015

வினைத்துய்மை

#653

மூலம்:
ஓஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை
யாஅது மென்னு மவர்.

சீர்பிர்த்து:
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅது மென்னு மவர்.

அருஞ்சொற்கள்:

ஓதல் - ஓவுதல் - விடுதல், ஒளிமாழ்கும் - நற்பெயரைத் தொலைக்கும்; ஆதும் - மென்மேலும் உயர்வேன் ; என்னும் - என்று சொல்லும்

பொருள் : குழுவினர் முயல்க. .

17/10/2015

திருக்குறள்:

பொருட்பால்:

பெரியாரைத் துணைக்கோடல்

#450

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடின்.

சீர் பிரித்து...:

பல்லார் பகைகொளலின் பத்துஅடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடின்.

அருஞ்சொற்கள்:

அடுத்த - மடங்கான

பொருள் : 

.................

18/10/2015

திருக்குறள்

ஆள்வினையுடைமை

#620

ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித்
தாழா துஞற்று பவர். .

சீர்பிர்த்து:
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்
தாழாது உஞற்று பவர். .

அருஞ்சொற்கள்:

ஊழ் - fate; உப்பக்கம் - முதுகுப்பக்கம் (அதாவது தாண்டிச் செலுவர்/வீழ்த்துவர்; உலைவு - தளர்சசி; தாழாது - விடாது; உழற்றுதல் - முயற்சி செய்தல்.

பொருள் : குழுவினர் தமக்கான உரையினைத் தாமே எழுதிக் கொண்டு குழுவிலும் இடுக...

19/10/2015
திருக்குறள்.

தெரிந்து வினையாடல்:

அதிகாரத் தலைப்பின் விளக்கம்:
அஃதாவது , ஆராய்ந்து தெளியப்பட்ட வினைத்தலைவரை , அவரவர் திறமறிந்து அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட வினைகளை ஆற்றுவதன்கண் அவரை ஆண்டு நடத்துதல் .

#511
 
நன்மையுந் தீமையு நாடி நலம்புரிந்த
தன்மையா னாளப் படும் .

சீர்பிர்த்து:
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும் .

அருஞ்சொற்கள்:
எல்லாம் எளிமையான சொற்களே...

பொருள் : குழுவினர் முயல்க. .

மேலும் படிக்க »

இன்றொரு குறள் கற்போம்: குறளோவியன் கல்லூர் அ.சாத்தப்பன்

இன்றொரு குறள் கற்போம்: 13/10/2015
************************************
மூலம்:

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.

" சால்பிற்குக் கட்டளை யாதெனிற்
:point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right:
  றோல்வி
:point_right::point_right::point_right::point_right:
   துலையல்லார் கண்ணுங் கொளல்."
:point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right:
(குறள்: 986)

உரை.பாடம்.
************

சால்பிற்குக் கட்டளை யாதுஎனின்,
தோல்வி, 
துலைஅல்லார் கண்ணும் கொளல்.

சொற்பொருள்:
****************

சால்பிற்குக் கட்டளை யாது எனின்= சால்பு, அதாவது நற்பண்புகளுக்கு உடைமை என்னும் பொன்னுக்கு உரைகல் (கட்டளை) எதுவெனில்,

துலை அல்லார் கண்ணும் தோல்வி கொளல் =  தம்மினும் வலிமை குன்றியவர்
இடத்தேயும் தம் தோல்வியை ஏற்றுக் கொள்வதே ஆகும்.

விளக்கம்/ கருத்து:
*********************
ஒருவர், நற்குணத்திற்கு உரியவர் எனக் கண்டறிவது எப்படி என்று கேட்பின், அவர், தம்மினும் வலிமை பெற்றவரிடத்தில் தம் தோல்வியை ஏற்றுக் கொள்வது போன்றே, தம்மினும் மெலியாரிடத்திலும் (தமக்கு நிகரான வலிமையைப் பெற்றிராதவரிடத்திலும்), தமக்கு உண்டாகும் தோல்வியை வெற்று வீறாப்புக்கொண்டு மழுப்பாமல்  பேராண்மையுடன் ஏற்றுக் கொள்வதே ஆகும் என்பதாம்.

ஆம்! சால்பினை ஆளும் தன்மைக்குச் சான்றாக நிற்கும் உரைகல், ஒருவர் தமக்குச் சமமானவரல்லார் இடத்தேயும், தாம் உறும் தோல்வியை ஒப்புக்கொள்வதே ஆகும் என்றவாறு.

துலையல்லார்-: தம்மொடு சமாமாகக் கருதற்குரியவரல்லார்.
கொளல்-:  ஏற்றுக் கொள்ளுதல்.
சால்பு -:  நிறைவு- நற்குணங்களால் 
                 நிறைவு பெறுதல்


இது, சான்றாண்மை என்னும் அதிகாரத்தில்   (அதி. # 99),நற்குணங்களைப் பெற்ற ஒருவர், அவற்றை ஆளும் தன்மை  பற்றித் திருவள்ளுவர் கூறும்  வகைமை எனக் கொள்க.
(சால்பு > நிறைவு எய்திய நிலை;  > சான்று + ஆண்மை =  சான்றாண்மை - சால்பினை ஆளும்
         திறப்பாடு)

ஐயப்பாடு :

ஐயா ... ஒரு ஐயம்... இக்குறளின் பொருள் விளங்கவில்லை... ஒருவரிடம் தோல்வியடைந்தால் அவர் சமமற்றவறாக எப்படி இருப்பார். தம்மினும் தாழ்ந்தவரிடம் தோல்வி ஏன் நிகழ வேண்டும்... விட்டுக் கொடுத்துவிடவேண்டும் என்று பொருளா....ஐயா.

விடை :

தம்மை விட வலியாரிடம் தோல்வி ஒப்புக்கொள்வதை காட்டிலும் , எளியவர்களிடம் சில நேரம் தோல்வி நேரும் போது அதனை ஏற்று ஒப்புக்கொள்தலே பெருமை ஆகும். எ.கா: நம் குழந்தை சதுரங்கம் விளையாடும் போது எவ்வளவு தான் தெரிந்தாலும் கவனக்குறைவால் தோற்க நேர்ந்தால் ஒப்புக்கொண்டால் பெருமை ஆகும் ... அதனை விடுத்து உனக்கு கற்றுக்கொடுக்க தான் விட்டுக்கொடுத்தேன் என சப்பைக்கட்டுவது ஆகாது.


? :
சால்பிற்குக் கட்டளை என்று அவ்வளவு உயர்த்திக் கூறுவதால், தங்குழநதையோடு தாம் விளையாடும் வினை இங்கு பொருந்துமா என்று மலங்குகிறேன் நண்பரே...
மேலும் கொளல் என்று கொள்ளுதலைக் குறிப்பதால், தோல்வியைத் தாமே தழுவிக் கொளல் என்று பொருட்படுமோ..

விடை : 

குழந்தை என்பதனை விடுத்து... பெரியோர்கு அழகு சிறியோரையும் அரவணைத்து செல்வதிலேயே..... அதே போல் சிறியோரையும் வலியோராய் வளர்த்தெடுத்து வழிநடத்துவதிலேயே உள்ளது. தம் திறத்தால் வெற்றி பெற்றாலும் அது ஏதோ ஏதேச்சையாக நடந்ததாக மன திடத்தை உடைப்பது அவர்களின் வளர்சிசியை தடுப்பதோடு பெரியோர்க்கும் அழகு ஆகாது. தானே தோல்வியை தழுவுதல் எப்படி சிறியோரை வழிநடத்தும்.

ஆக வலியோரிடம் தோல்வி ஒப்புக்கொள்வதால் தம் திறம் வளர உதவும்... சிறியோரிடம் தோல்வி ஒப்புக்கொள்வதால் நல்ல திறமிக்க குடிகள் உருவாக ஏதுவாகும்.... அதுவே பெரியோருக்கு சால்பாகும்.


15/10/2015
பெருந்தகையீர்,
     இன்று நாம் கற்கவிருக்கும் குறள்,  'குற்றங்கடிதல்' என்னும் அதிகாரத்தில்
(அதி.44) இடம்பெற்றுள்ள குறள்களில்
ஒன்றாகும்.
     குற்றங்கடிதல் என்றால், ஒருவரிடமுள்ள
குற்றத்தைக் களைதல் அல்லது விலக்குதல்
எனப்பொருள்படும்.ஒருவரிடம் உள்ள
குற்றங்கள் அல்லது குறைப்பாடுகள் யாவை என்பதையும் அவற்றைக் களையும்
வகையினையும் எடுத்துரைக்கும் பாங்காக
இவ்வதிகாரம் அமைக்கப்பட்டுள்ளது.
அத்தன்மையிலான ஒரு குறளைக்
காண்போம்.


மூலபாடம்:-
""""""""""""'"'""'
"தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் 
  காண்கிற்பி
  னென்குற்ற மாகு மிறைக்கு.".   (#436)


                
உரைநடைப் பாடம்:
""""""""""""""""""""""""""""""
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம்
காண்கிற்பின்,
என்குற்றம் ஆகும் இறைக்கு?


= தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம்
    காண்கிற்பின், இறைக்கு ஆகும்
    குற்றம் என்?


சொற்பொருள்:
"""""""""""""""""""""""""
#தன்குற்றம் நீக்கி = முதலில் தன்னிடமுள்ள
      குற்றம் என்னவென்பதைக் கண்டு
       பிடித்து அதனைக் களைந்தபின்;


#பிறர்குற்றம் காண்கிற்பின் = 
     பிறரிடம் உள்ள குற்றத்தைக்
     காணக் கூடுமாயின்;


#இறைக்கு ஆகும் குற்றம் என் ? =
     அரசனுக்கு வரக்கூடிய குற்றம் யாதோ?


விளக்கம்/ கருத்து:
""""""""""""""'""""""""""""""""
        அரசன் முதலில் தன்னிடமுள்ள
குற்றத்தை ஆய்ந்து அதனை விலக்கிக் கொண்டபின், பிறர் குற்றங்களைக் 
களைய முயல்வாரேயானால், அதனால்
அவ்வரசர்க்கு ஏற்படக்கூடிய தீமை
என்னவாகும் - என்ற வள்ளுவரின் வினா,
அரசியல் பகுதியில் இடம்பெற்றிருப்தால்,
இஃது ஓர் அரசர்க்குக் கூறியவாறு
அமைந்திருப்பினும், 
            திருக்குறளிலுள்ள அறம்,பொருள்
பற்றிய நெறிகளெல்லாம், தனிமாந்தர்
ஒவ்வொருவருக்கும் பொதுவாகச் சொல்லப்பட்ட நெறிகளெனக் கொள்ளவேண்டும் என்பதை நாம் மறத்தலாகாது!
             அவ்வாறே, இக்குறளில் சொல்லப்பட்டுள்ளதும்,  மாந்தரிடம்
இயல்பாகவேயுள்ள குற்றத்தை- அதாவது, தம்மிடமுள்ள  குற்றங்களைப் பற்றி எண்ணாமல் பிறரிடம் உள்ள குற்றங்கைப் பற்றியே வசைபாடும் போக்கினைக் கண்டிப்பதற்காகவே- உணர்த்தும் பொருட்டாகக் கூறப்பட்டதெனக் கொள்ள
வேண்டும்.


          ஆகவே, இக்குறளால் நாமறிவது, 
முதலில் நம்மிடமுள்ள குறையை அகற்றிய
பின்னரே, பிறரிடமுள்ள குறையைப்பற்றிக்
கூறும் தகுதியைப் பெறுதல் வேண்டும்
என்பதேயாகுமெனக் கொள்க!


" ஊரைத் திருத்தும் முன், உன்னைத்
திருத்திக்கொள்!" 
என்னும் பழங்கூற்றினையும் இங்கு
நினைவுகூர்க!.


நன்றி.


19/10/2015

திருக்குறளில் காணப்படும்
அருஞ்சொல்- சொற்றொடர்
அகரமுதலியும் இணையான
குறள்களும்.

பேரன்புடையீர், வணக்கம்.

இன்று முதல், திருக்குறளில் உள்ள
அருஞ்சொற்கள் மற்றும் சொற்றொடர்களுக்கான பொருள்களையும்
அவை இடம்பெற்றுள்ள குறள்களையும்
ஒவ்வொன்றாகக் காணத்தொடங்குவோம்.


001) அஃகாமை = அஃகுதல் என்றால்
                   சுருங்குதல், குறைதல் எனப்படும்.
                   அஃகாமை எனில், அதற்கு 
                   எதிர்மறையாக- சுருங்காமை
                  (சுருங்காதிருத்தல்), அல்லது
                   குறையாமை (குறையாதிருத்தல்)
                    எனப்படும்.

இச்சொல் 'வெஃகாமை' என்னும் 18- வது
அதிகாரத்தில், குறள் எண்:178 -இல்
உள்ளது.
இனி, அக்குறளைப் பார்ப்போம்.

"அஃகாமை செல்வத்திற் கியாதெனின்
*****************************************
  வெஃகாமை 
*****************
  வேண்டும் பிறன்கைப் பொருள்."
**************************************

இக்குறளைச் சீர்பிரித்துப் பார்ப்பின்,

'அஃகாமை செல்வத்திற்கு யாது?' எனின்,
 வெஃகாமை
  வேண்டும் பிறன் கைப் பொருள். -

என்று ஆகும்.

இக்குறளுக்கான விளக்கம்:-

ஒருவரிடமுள்ள செல்வம் சுருங்காமல் இருப்பதற்கான வழி என்னவென்றால், 
அவர் பிறருக்குரிய பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பதேயாகும்..
என்றவாறு.

இஃது, இன்று நாம் அறிந்துகொண்ட பொருளும் குறளும் ஆகும்.

நன்றி. இன்னும் தொடர்வோம்.....



மேலும் படிக்க »