தமிழ் எனும் சொல்லின் பொருள் விளக்கம் என்ன ?
1. அமிழ்து > தமிழ் ஆனது ....அமிழ்து எனச் சொல்ல சொல்ல தமிழ் என வரும் .
2. தம் இல் மொழி எனும் சொல் தமிழ் என்றானது . தம் வீட்டு , நாட்டு மொழி தமிழே .
3. தாமம் எல் மொழி தாமெல் தமிழ் என்றானது . அருள் ஒளி மொழி என்பது இதன் பொருள் .
த » வன்மை
மி » மென்மை
ழ் » இடைமை
இவ்வாறு மூவிட ஒலிகளையும் பெயரில் உள்ளடக்கியுள்ள மொழி.
தம் இல் மொழி பிறமொழி தாக்கம் இல்லா தனித்தியங்கும் திறமுடைய மொழி . எனவும் பொருளாகும் .
தனித்தியங்கும் தமிழில் பிறமொழி கலப்பது முறையா?....அறமா ?....
#############
பண்டை நாளில் தமிழைக் கதிரவனுக்கு நிகராக வைத்தெண்ணிப் போற்றினர் .
ஓங்கல் இடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலி நீர் ஞாலத் திருளகற்றும் ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னேர் இலாத தமிழ்
ஓங்கல் > ஓங்கிய மலை
நன்றி: திருமாவளவன்.
அரங்கன்:
ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.
விளக்கம்:
மலையில் தோன்றி, உயர்ந்தவர் தொழுமாறு விளங்கி, இந்த உலகத்து இருளையெல்லாம் அகற்றுபவை இரண்டு. அவற்றுள் ஒன்று கதிரவன் என்னும் ஞாயிறு. மற்றொன்று தன்னிகரற்ற தமிழ் மொழி என்றவாறு.
(தண்டியலங்கார உரையில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ள பழம்பாடல்)
:tulip::tulip:
திருமாவளவன்:
தமிழுக்கு , ஓங்கிய மலையிடை தோன்றி உலகின் இருளை அகற்றும் உழவனின் பூட்டப்பட்ட ஏரில் மின்னித் தெறிப்பொளி வீசும் கதிரவனை அன்றி வேறு எதையும் நிகராக வைக்க இயலாது . கதிரவன் உலகில் படர்ந்த இருளை அகற்றுகின்றது . தமிழ் மாந்தர் மனத்தில் படர்ந்த இருளை அகற்றவல்லது .