இன்றொரு குறள் கற்போம்: 13/10/2015
************************************
மூலம்:
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
" சால்பிற்குக் கட்டளை யாதெனிற்
:point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right:
றோல்வி
:point_right::point_right::point_right::point_right:
துலையல்லார் கண்ணுங் கொளல்."
:point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right::point_right:
(குறள்: 986)
உரை.பாடம்.
************
சால்பிற்குக் கட்டளை யாதுஎனின்,
தோல்வி,
துலைஅல்லார் கண்ணும் கொளல்.
சொற்பொருள்:
****************
சால்பிற்குக் கட்டளை யாது எனின்= சால்பு, அதாவது நற்பண்புகளுக்கு உடைமை என்னும் பொன்னுக்கு உரைகல் (கட்டளை) எதுவெனில்,
துலை அல்லார் கண்ணும் தோல்வி கொளல் = தம்மினும் வலிமை குன்றியவர்
இடத்தேயும் தம் தோல்வியை ஏற்றுக் கொள்வதே ஆகும்.
விளக்கம்/ கருத்து:
*********************
ஒருவர், நற்குணத்திற்கு உரியவர் எனக் கண்டறிவது எப்படி என்று கேட்பின், அவர், தம்மினும் வலிமை பெற்றவரிடத்தில் தம் தோல்வியை ஏற்றுக் கொள்வது போன்றே, தம்மினும் மெலியாரிடத்திலும் (தமக்கு நிகரான வலிமையைப் பெற்றிராதவரிடத்திலும்), தமக்கு உண்டாகும் தோல்வியை வெற்று வீறாப்புக்கொண்டு மழுப்பாமல் பேராண்மையுடன் ஏற்றுக் கொள்வதே ஆகும் என்பதாம்.
ஆம்! சால்பினை ஆளும் தன்மைக்குச் சான்றாக நிற்கும் உரைகல், ஒருவர் தமக்குச் சமமானவரல்லார் இடத்தேயும், தாம் உறும் தோல்வியை ஒப்புக்கொள்வதே ஆகும் என்றவாறு.
துலையல்லார்-: தம்மொடு சமாமாகக் கருதற்குரியவரல்லார்.
கொளல்-: ஏற்றுக் கொள்ளுதல்.
சால்பு -: நிறைவு- நற்குணங்களால்
நிறைவு பெறுதல்
இது, சான்றாண்மை என்னும் அதிகாரத்தில் (அதி. # 99),நற்குணங்களைப் பெற்ற ஒருவர், அவற்றை ஆளும் தன்மை பற்றித் திருவள்ளுவர் கூறும் வகைமை எனக் கொள்க.
(சால்பு > நிறைவு எய்திய நிலை; > சான்று + ஆண்மை = சான்றாண்மை - சால்பினை ஆளும்
திறப்பாடு)
ஐயப்பாடு :
ஐயா ... ஒரு ஐயம்... இக்குறளின் பொருள் விளங்கவில்லை... ஒருவரிடம் தோல்வியடைந்தால் அவர் சமமற்றவறாக எப்படி இருப்பார். தம்மினும் தாழ்ந்தவரிடம் தோல்வி ஏன் நிகழ வேண்டும்... விட்டுக் கொடுத்துவிடவேண்டும் என்று பொருளா....ஐயா.
விடை :
தம்மை விட வலியாரிடம் தோல்வி ஒப்புக்கொள்வதை காட்டிலும் , எளியவர்களிடம் சில நேரம் தோல்வி நேரும் போது அதனை ஏற்று ஒப்புக்கொள்தலே பெருமை ஆகும். எ.கா: நம் குழந்தை சதுரங்கம் விளையாடும் போது எவ்வளவு தான் தெரிந்தாலும் கவனக்குறைவால் தோற்க நேர்ந்தால் ஒப்புக்கொண்டால் பெருமை ஆகும் ... அதனை விடுத்து உனக்கு கற்றுக்கொடுக்க தான் விட்டுக்கொடுத்தேன் என சப்பைக்கட்டுவது ஆகாது.
? :
சால்பிற்குக் கட்டளை என்று அவ்வளவு உயர்த்திக் கூறுவதால், தங்குழநதையோடு தாம் விளையாடும் வினை இங்கு பொருந்துமா என்று மலங்குகிறேன் நண்பரே...
மேலும் கொளல் என்று கொள்ளுதலைக் குறிப்பதால், தோல்வியைத் தாமே தழுவிக் கொளல் என்று பொருட்படுமோ..
விடை :
குழந்தை என்பதனை விடுத்து... பெரியோர்கு அழகு சிறியோரையும் அரவணைத்து செல்வதிலேயே..... அதே போல் சிறியோரையும் வலியோராய் வளர்த்தெடுத்து வழிநடத்துவதிலேயே உள்ளது. தம் திறத்தால் வெற்றி பெற்றாலும் அது ஏதோ ஏதேச்சையாக நடந்ததாக மன திடத்தை உடைப்பது அவர்களின் வளர்சிசியை தடுப்பதோடு பெரியோர்க்கும் அழகு ஆகாது. தானே தோல்வியை தழுவுதல் எப்படி சிறியோரை வழிநடத்தும்.
ஆக வலியோரிடம் தோல்வி ஒப்புக்கொள்வதால் தம் திறம் வளர உதவும்... சிறியோரிடம் தோல்வி ஒப்புக்கொள்வதால் நல்ல திறமிக்க குடிகள் உருவாக ஏதுவாகும்.... அதுவே பெரியோருக்கு சால்பாகும்.
15/10/2015
பெருந்தகையீர்,
இன்று நாம் கற்கவிருக்கும் குறள், 'குற்றங்கடிதல்' என்னும் அதிகாரத்தில்
(அதி.44) இடம்பெற்றுள்ள குறள்களில்
ஒன்றாகும்.
குற்றங்கடிதல் என்றால், ஒருவரிடமுள்ள
குற்றத்தைக் களைதல் அல்லது விலக்குதல்
எனப்பொருள்படும்.ஒருவரிடம் உள்ள
குற்றங்கள் அல்லது குறைப்பாடுகள் யாவை என்பதையும் அவற்றைக் களையும்
வகையினையும் எடுத்துரைக்கும் பாங்காக
இவ்வதிகாரம் அமைக்கப்பட்டுள்ளது.
அத்தன்மையிலான ஒரு குறளைக்
காண்போம்.
மூலபாடம்:-
""""""""""""'"'""'
"தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங்
காண்கிற்பி
னென்குற்ற மாகு மிறைக்கு.". (#436)
உரைநடைப் பாடம்:
""""""""""""""""""""""""""""""
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம்
காண்கிற்பின்,
என்குற்றம் ஆகும் இறைக்கு?
= தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம்
காண்கிற்பின், இறைக்கு ஆகும்
குற்றம் என்?
சொற்பொருள்:
"""""""""""""""""""""""""
#தன்குற்றம் நீக்கி = முதலில் தன்னிடமுள்ள
குற்றம் என்னவென்பதைக் கண்டு
பிடித்து அதனைக் களைந்தபின்;
#பிறர்குற்றம் காண்கிற்பின் =
பிறரிடம் உள்ள குற்றத்தைக்
காணக் கூடுமாயின்;
#இறைக்கு ஆகும் குற்றம் என் ? =
அரசனுக்கு வரக்கூடிய குற்றம் யாதோ?
விளக்கம்/ கருத்து:
""""""""""""""'""""""""""""""""
அரசன் முதலில் தன்னிடமுள்ள
குற்றத்தை ஆய்ந்து அதனை விலக்கிக் கொண்டபின், பிறர் குற்றங்களைக்
களைய முயல்வாரேயானால், அதனால்
அவ்வரசர்க்கு ஏற்படக்கூடிய தீமை
என்னவாகும் - என்ற வள்ளுவரின் வினா,
அரசியல் பகுதியில் இடம்பெற்றிருப்தால்,
இஃது ஓர் அரசர்க்குக் கூறியவாறு
அமைந்திருப்பினும்,
திருக்குறளிலுள்ள அறம்,பொருள்
பற்றிய நெறிகளெல்லாம், தனிமாந்தர்
ஒவ்வொருவருக்கும் பொதுவாகச் சொல்லப்பட்ட நெறிகளெனக் கொள்ளவேண்டும் என்பதை நாம் மறத்தலாகாது!
அவ்வாறே, இக்குறளில் சொல்லப்பட்டுள்ளதும், மாந்தரிடம்
இயல்பாகவேயுள்ள குற்றத்தை- அதாவது, தம்மிடமுள்ள குற்றங்களைப் பற்றி எண்ணாமல் பிறரிடம் உள்ள குற்றங்கைப் பற்றியே வசைபாடும் போக்கினைக் கண்டிப்பதற்காகவே- உணர்த்தும் பொருட்டாகக் கூறப்பட்டதெனக் கொள்ள
வேண்டும்.
ஆகவே, இக்குறளால் நாமறிவது,
முதலில் நம்மிடமுள்ள குறையை அகற்றிய
பின்னரே, பிறரிடமுள்ள குறையைப்பற்றிக்
கூறும் தகுதியைப் பெறுதல் வேண்டும்
என்பதேயாகுமெனக் கொள்க!
" ஊரைத் திருத்தும் முன், உன்னைத்
திருத்திக்கொள்!"
என்னும் பழங்கூற்றினையும் இங்கு
நினைவுகூர்க!.
நன்றி.
19/10/2015
திருக்குறளில் காணப்படும்
அருஞ்சொல்- சொற்றொடர்
அகரமுதலியும் இணையான
குறள்களும்.
பேரன்புடையீர், வணக்கம்.
இன்று முதல், திருக்குறளில் உள்ள
அருஞ்சொற்கள் மற்றும் சொற்றொடர்களுக்கான பொருள்களையும்
அவை இடம்பெற்றுள்ள குறள்களையும்
ஒவ்வொன்றாகக் காணத்தொடங்குவோம்.
001) அஃகாமை = அஃகுதல் என்றால்
சுருங்குதல், குறைதல் எனப்படும்.
அஃகாமை எனில், அதற்கு
எதிர்மறையாக- சுருங்காமை
(சுருங்காதிருத்தல்), அல்லது
குறையாமை (குறையாதிருத்தல்)
எனப்படும்.
இச்சொல் 'வெஃகாமை' என்னும் 18- வது
அதிகாரத்தில், குறள் எண்:178 -இல்
உள்ளது.
இனி, அக்குறளைப் பார்ப்போம்.
"அஃகாமை செல்வத்திற் கியாதெனின்
*****************************************
வெஃகாமை
*****************
வேண்டும் பிறன்கைப் பொருள்."
**************************************
இக்குறளைச் சீர்பிரித்துப் பார்ப்பின்,
'அஃகாமை செல்வத்திற்கு யாது?' எனின்,
வெஃகாமை
வேண்டும் பிறன் கைப் பொருள். -
என்று ஆகும்.
இக்குறளுக்கான விளக்கம்:-
ஒருவரிடமுள்ள செல்வம் சுருங்காமல் இருப்பதற்கான வழி என்னவென்றால்,
அவர் பிறருக்குரிய பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பதேயாகும்..
என்றவாறு.
இஃது, இன்று நாம் அறிந்துகொண்ட பொருளும் குறளும் ஆகும்.
நன்றி. இன்னும் தொடர்வோம்.....