எழுத்து இலக்கணத்தின் உறுப்புகள்

எழுத்து இலக்கணத்தின் உறுப்புகள்

1. எண் (எழுத்துகளின் தொகை)
2. பெயர் (வகை)
3. முறை (வைப்பு முறை)
4. பிறப்பு (எழுத்துகள் பிறக்கும் முறை)
5. உருவம் (எழுத்துகளின் உருவம்)
6. மாத்திரை (எழுத்துகளின் அளபு)
7. முதனிலை (சொல்லின் முதலில் நிற்கும் எழுத்துகள்)
8. ஈறுநிலை (சொல்லின் இறுதியில் நிற்கும் எழுத்துகள்)
9. இடைநிலை (இந்த இந்த எழுத்தின் பின் இந்த இந்த எழுத்துகள் சொற்களின் இடையில் வருதல் பற்றியது)
10. போலி (ஐ - அய்...)
11. சொல்லுருவாக்கம் (எழுத்துகள் சொற்களாக உருவாகும் முறை)
12. புணர்ச்சி (இரு எழுத்துகள் சேரும் போதான நிலை)

இப்பத்து உறுப்புகளை வகுத்தது நன்னூல் என்னும் இலக்கண நூலாகும்...  தமிழிலக்கணம் ஐந்திறத்தது அல்லவா... அதில் எழுத்தையும் சொல்லையும் முழுமையாகவும் தெளிவாகவும் சொல்லும் நூல் பவணந்தி முனிவர் இயறறிய நன்னூலாகும்... இந்நூலின் காலம் 13ம் நூற்றாண்டு... அதாவது தொல்காப்பியத்திற்கு கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டு பிந்தியது...

-அரங்கன்