பன்னாடையிற் படிந்தவை 16/10/15 - 02/11/15

16/10/2015 : அரங்கன் ஐயா
பன்னாடையில் நேற்றுப் படிந்தவை...
1. வாசிப்பு - படிப்பு///
2. என்னை போன்றோருக்கு - என்னைப் போன்றோருக்கு///
3. பணிசுமை - பணிச்சுமை
4. விட்டுவிட்டு கெட்டதை - விட்டுவிட்டுக் கெட்டதை///
5. பிரத்தியேகமாக - குறிப்பாக///
6. நியமிக்கிறேன்.. நியமித்தல் என்பதை அருளியார் அகராதியில் பாருங்கள் மகேசம்மா...
7. ஆரிய/பிறமொழி - ஆரியப்/பிறமொழிச்
8. நூலென்று - நூலன்று///
9. வாசிப்பு - படிப்பு///
10. கடல்கோலால் - கடல்கோளால்///
11. தோன்றியவைகள் - தோன்றியவை///
12. தொல்காப்பியம் எழுதிவிட்டதாக - தொல்காப்பியம் எழுதப்பட்டுவிட்டதாக///
13. விவாதிக்கும் நேரம் - வாயாடும் நேரம்///
14. கடை சங்கத்து - கடைச் சங்கத்து///
15. ஆள் மரமாக - ஆல மரமாக/// ஆல் மரமாக///
16. இலக்கணத்தை தானே - இலக்கணத்தைத் தானே///
17. சொன்னீர - சொன்னீர்///
18. வித்தியாசம் - வேறுபாடு///
19. இப்ப இருக்கும் - இப்போது இருக்கும்///
20. பரிணாம வளர்ச்சி - இயற்கை வளர்ச்சி / இயற்கைத் தெரிவு வளர்ச்சி
21. குறீடுகள் - குறியீடுகள்///
22. ஓசையடணும் - ஓசையுடனும்///
23. வகை படுத்தவும் - வகைப் படுத்தவும்///
24. தேடுவோம - தேடுவோம்///
25. மொழியை கையாண்டோம் - மொழியைக் கையாண்டோம்///
26. சொற்கோவகள் - சொற்கோவைகள்///
27. களை கட்டி - களைக் கட்டி///
28. வாழ்வும் குறையும் - வாழ்வுங் குறையும்
29. இலக்கணம் தானே - இலக்கணந் தானே
30. விவரம் என்பதை அருளி அகராதியிற் பாருங்கள் அம்மா..
31. பகுச்சொல் - பகுஞ்சொல்///
32. கண்காட்சியை "தமிழர்  - கண்காட்சியைத் தமிழர்
33. நடுவண்ணாட்சி - நடுவணாட்சி///
34. நேரமுல்லை - நேரமில்லை///
35. பற்றி சிறிது - பற்றிச் சிறிது///
36. ஒருவர் தான் உரை சொல்லவேண்டும் - ஒருவர்தான் உரைசொல்ல வேண்டும்///
37. blog - வளவனார் ஐயா உதவவும்
38. சூரியோதய - கதிரெழுங்காலை / விடியல்/ வைகல்/ நாள்...
39. இன்றையப் பாடம் - இன்றைய பாடம்///
40. ஒன்றாக சேர்ந்து - ஒன்றாகச் சேர்ந்து///
41. வசம் - அம்மா, அருளியாரிடம் கேளுங்களேன்...
42. மேனி - உடல் ( அம்மா அருளியார்.........)
43. இதமாய் சிரித்து - இதமாய்ச் சிரித்து///
44. உவகைக் கொண்டதால் - உவகை கொண்டதால்
45. செயல்பாட்டை பார்க்க - செயல்பாட்டைப் பார்க்க///
46. மு.வா - மு.வ///
47. விரைவாக பதிவிடவும் - விரைவாகப் பதிவிடவும்///
48. இது தமிழ் - இந்தத் தமிழ்///
49. வினைத்துய்மை - வினைத்தூய்மை///
17/10/2015
பன்னாடையில் இன்று படிந்தவை...
1. குரூப்- பிரிவு
2. லோயர் - கீழ்நிலை, ஹையர் - மேனிலை
3. அப்ஜெக்டிவ் முறை - பொருந்துவதெடுத்தல் எனும் முறை
4. இ மெயில் - மின்னஞ்சல்
5. ஆன்லைனில் - (இணைய) உள்ள நிலையில்
6. நெட்பாங்கிங்கு - இணையவழி கணக்காளுதல் முறையில்
7. மொபைல் - கைப்பேசி
8. கிரெடிட் கார்டு - கடனட்டை, டெபிட் கார்டு - பற்றட்டை
9. ஆப்லைன் - (இணையமில்லா) அல்ல நிலையில்
10. ஃபைலை - கோப்பை
11. பிரிண்ட் அவுட்டோ - அச்சுப்படியோ
12. வாரம் - கிழமை
13. ஹால்டிக்கெட்டை - தேர்வு நுழைவுச்சீட்டை
14. தேதி - நாள்
15. குடுக்கின்றனர் - கொடுக்கின்றனர்
16. பார்த்தீர் தம்பி - பார்த்தீரா தம்பி
17. பயணம் - செலவு
18. கிடைத்தப் பேறுகளாகும் - கிடைத்த பேறுகளாகும்
19. புத்தி - அறிவு
20. இதற்கு தரவு - இதற்குத் தரவு
21. கவிஞர் - பாவலர்
22. வாதம் - கருத்து
23. அவ்வையார் - ஔவையார்
24. அடிமைக்கி - அடிமையாக்கி
25. மனோபாவம் - மனத்துநிலை
26. பெய்யனெ - பெய்யென
19/10/2015
பன்னாடையில் நேற்றும் இன்றும் படிந்தவை
1. சீர் பிர்த்து - சீர் பிரித்து
2. முழுதாகச் செயல்படக்கூடிய - முழுதாகச் செயல்படுத்தக்கூடிய
3. தாழ்வாக பார்க்க - தாழ்வாகப் பார்க்க
4. சற்று குழப்பம் - சற்றுக் குழப்பம்
5. பாயிது - பாயுது
6. தேரிந்த - தெரிந்த
7. தங்களுக்கு புரியவில்லை - தங்களுக்குப் புரியவில்லை
8. கேளி - பகடி
9. கருவில் இருக்கும் சிசு - வயிற்றில் இருக்குங் கரு
10. பனிவன்புடன் - பணிவன்புடன்
11. இரத்த - அரத்த
12. ஷேர் செய்யவும் - பரப்பவும்
13. சுலபமாக - எளிதாக
14. உதாரணமாக - காட்டாக (எடுத்துக்காட்டாக)
15. user name - பயனர் பெயர்
16. பதிலளிக்க - விடையளிக்க
17. தினமும் - நாள்தோறும் / நாடோறும்
18. விஷயம் - செய்தி / சேதி
19. அதை பெண்கள் - அதைப் பெண்கள்
20. ஐந்தும் சிரிக்குமாம் - ஐந்துஞ் சிரிக்குமாம்
21. தேவையற்றை - தேவையற்றதை
22. உறுத்தி துன்பம் - உறுத்தித் துன்பம்
23. மனிதநேயம் - மாந்தநேயம்
24. சன்னல் - சாளரம்
25. தீவிர - கடும்
26. அறிந்துத் தக்க - அறிந்து தக்க
20/10/2015
பன்னாடையில் இன்று படிந்தவை :
1. தமிழ் சொற்களும் - தமிழ்ச்சொற்களும்
2. கலக்ககூடிய - கலக்கக் கூடிய
3. சுமப்பி குறிகை - சுமப்பிக் குறிகை
4. சுவாமிகள் - பெருமான்
5. சந்தியை பற்றி சிந்திக்கவே - சந்தியைப் பற்றிச் சிந்திக்கவே
6. சேருமிடமாக கூறுவர் - சேருமிடமாகக் கூறுவர்
7. கருதி சொன்னேன் - கருதிச் சொன்னேன்
8. பயணம் - செலவு
9. கஷ்டப்பட்டு - தொல்லைப் பட்டு
10. பம்ம்பு - அடிகுழாய்
11. ஜக்கில் - செம்பில், கலனில்
12. சந்தேகமாக - ஐயமாக
13. உத்திரவாதமும் - உறுதியும்
14. யோசித்தான் - சிந்தித்தான்
15. அவசியமான - தேவையான
16. அலட்சியம் - பரிவின்மை, (அருளியார் அகராதியிற் பாருங்கள் அம்மா....)
17. இந்த குறளை பயிற்ச்சிக்கு - இக்குறட்பாவைப் பயிற்சிக்குத்
18. விதி - நெறி
19. பின்னர் வைத்தை - பின்னர் வைத்து
20. என்பதை சொல்லுங்கள் - என்பதைச் சொல்லுங்கள்
21. பிறபபன - பிறப்பன
22. பத்து குறட்பாக்களில் - பத்துக் குறட்பாக்களில்
23. மனத்தொடு (மனத்து + ஓடு) - மனத்தொடு (மனத்து + ஒடு)
24. தவத்தொடு (மனத்து + ஓடு) - தவத்தொடு (மனத்து + ஒடு)


29/10/2015

பன்னாடையில் நேற்றின்று படிந்தவை :
1. குழு தோழர்களுக்கு - குழுத் தோழர்களுக்கு
2. இந்த வாசகத்தை - இந்தச் சொல்லை
3. எனக்கு தெரியாது - எனக்குத் தெரியாது
4. நான் மொழி உணர்வாளர் - நான் ஒரு மொழியுணர்வாளன்
5. குழந்தைக்கு பெயர் - குழந்தைக்குப் பெயர்
6. பெயர் சுடும்போது - பெயர் சூட்டும்போது
7. தனி செய்தி - தனிச்செய்தி
8. ஏற்ற பெற்றி வந்து - ஏற்றப்பெற்று வந்து
9. தமிழ்கல்வி - தமிழ்க்கல்வி
10. படங்களிலுருந்து - படங்களிலிருந்து
11. பலவீனர் - வலுக்குன்றியவர்
12. தலைப்புக்கு போகவில்லை.- தலைப்புக்குப் போகவில்லை
13. ஐஞ்சிறும் காப்பியங்கள் - ஐஞ்சிறுங் காப்பியங்கள்
14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ - இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா/தங்கை
15. அன்னைக்கு பிறந்தநாள் - அன்னைக்குப் பிறந்தநாள்
16. உறுப்புககளாலேயே - உறுப்புகளாலேயே
17. திருத்ததிற்கு - திருத்தத்திற்கு
18. மனதில் பதியுமல்லவா - மனத்தில் பதியுமல்லவா

2/11/15

பன்னாடையில் இக்கிழமை படிந்தவை:
1. தொகைப் பற்றிய - தொகை பற்றிய
2. இதுவரை நாம் கற்றது - இதுவரை நாம் கற்றவை
3. இந்துத்துவம் யென்றே - இந்துத்துவ மென்றே
4. குறளோவியங்களை காணாமல் - குறளோவியங்களைக் காணாமல்
5. வேர் சொற்கள் - வேர்ச் சொற்கள்
6. சுழடி பழிப்பது - சுழட்டிப் பழிப்பது
7. பகிர்வதற்காக தொகுத்தது - பகிர்வதற்காகத் தொகுத்தது
8. மண்டும் - மீண்டும் 
9. சம்மதம் - இசைவு
10. நிரைவுரை - நிறைவுரை
11. சாதாரணமான - எளிமையான
12. வார்த்தைகளால் - சொற்களால்
13. முறன்பட்டதாகவே - முறண்பட்டதாகவே
14. தெளிவு குடுக்குதோ - தெளிவு கொடுக்கிறதோ
15. அசுத்தம - அழுக்கு
16. தோன்றியதை பகிர்ந்து - தோன்றியதைப் பகிர்ந்து
17. போக்குவரத்து துறையில் - போக்குவரத்துத் துறையில்
18. இருக்போம் - இருப்போம்
19. மரத்திற்கு தளிர்தானே...- மரத்திற்குத் தளிர்தானே...
20. இனைத்தவர் - இணைத்தவர்
21. ஊராக - ஊகார
22. செய்துயிருக்கிறான் - செய்திருக்கிறான்
23. புத்தகதில் - புத்தகத்தில்

24. நிருவி - நிறுவி